தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 தெசலோனிக்கேயர்
1. சகோதரர்களே, இறுதியாக உங்களுக்கு அறிவுறுத்த விரும்புவது: நீங்கள் எவ்வாறு நடக்கவேண்டும், கடவுளுக்கு உகந்தவர்களாக எவ்வாறு வாழ வேண்டும் என்ற படிப்பினையை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். அதன்படியே நடந்து வருகிறீர்கள்; இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று, ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.
2. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எவை என அறிவீர்களன்றோ?
3. நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்: அதாவது, கெட்ட நடத்தையை விட்டு விடவேண்டும்.
4. கடவுளை அறியாத புறவினத்தார் காம இச்சைகளுக்கு இடங்கொடுப்பது போல் நீங்கள் செய்யாமல்,
5. உங்களுள் ஒவ்வொருவரும் தன் உடலை அடக்கி ஆண்டு மரியாதையாய் நடத்தி, பரிசுத்தமாய்க் காப்பாற்ற அறிந்திருக்கவேண்டும்.
6. எவனும் இக்காரியத்தில் மீறி நடந்து, தன் சகோதரனை வஞ்சிக்காமல் இருப்பானாக. இவை அனைத்திற்காகவும் ஆண்டவரே பழி வாங்குவார். இதை உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம், வற்புறுத்திக் கூறியிருக்கிறோம்.
7. கடவுள் நம்மை அசுத்தத்திற்காக அழைக்கவில்லை, பரிசுத்தத்திற்காகவே அழைத்திருக்கிறார்.
8. எனவே, இக்கட்டளைகளைப் புறக்கணிப்பவன் மனிதரைப் புறக்கணிப்பதில்லை; தம் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளித்த கடவுளையே புறக்கணிக்கிறான்.
9. சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதத்தேவையில்லை; ஒருவருக்கொருவர் அன்புகாட்ட கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
10. இதன்படி நீங்கள், மக்கெதோகியா நாடெங்கும் வாழும் சகோதரர்களே, நீங்கள் இதில் இன்னும் முன்னேற வேண்டுமேன்று வலியுறுத்துகிறோம்.
11. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக வாழ்வது பெருமையெனக் கருதி அதை நாடுங்கள்.
12. திருச்சபையைச் சேராதவர்கள் மட்டில் பாங்குடன் பழகி, பிறர் கையைப் பார்த்து வாழாதபடி, நாங்கள் கட்டளையிட்டது போல, உங்கள் கையாலேயே வேலை செய்யுங்கள்.
13. சகோதரர்களே, இறந்தோரைப் பற்றி உங்களுக்கு ஐயமிருத்தலாகாது, நம்பிக்கையற்ற ஏனையோரைப்போல் நீங்களும் வருந்தலகாது.
14. இயேசு இறந்தபின் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவசிக்கின்றோம் அல்லவா? அப்படியானால் இயேசுவின் ஒன்றிப்பில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
15. ஆண்டவருடைய வார்த்தையில் ஊன்றி, நாங்கள் உங்களுக்குச் சொல்லுவதாவது: உயிருடனிருக்கும் நாம், ஆண்டவரின் வருகை வரையில் உயிரோடு எஞ்சி நிற்கும் நாம், இறந்தோருக்கு முந்திக்கொள்ளமாட்டோம்.
16. அதிதூதரின் குரலொலியும் கடவுளின் எக்காளமும் அடையாளமாக முழங்க, ஆண்டவர் தாமே வானிலிருந்து இறங்கி வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் இறந்தோர், முதலில் உயிர்த்தெழவர்.
17. அதன் பின்னரே உயிரோடு எஞ்சி நிற்கும் நாம் அவர்களோடு கூட ஒன்றாய் மேகங்கள் மீது தூக்கிச் செல்லப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளப் போவோம். போய், ஆண்டவரோடு எப்போதும் இருப்போம்.
18. எனவே, இக்கருத்துக்களைக்கொண்டு ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 5 Chapters, Current Chapter 4 of Total Chapters 5
1 2 3 4 5
1 தெசலோனிக்கேயர் 4:1

×

Alert

×

tamil Letters Keypad References